
தமிழக வேலைவாய்ப்பு 2020: நேர்காணல் முறையில் உடனடி வேலை !
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டிரைவர் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம்.
| வாரியத்தின் பெயர் | தமிழக அரசு |
| பணிகள் | டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் |
| மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
| கல்வி தகுதி | 10 ஆம் வகுப்பு |
| நேர்காணல் நடைபெறும் நாள் | 07.08.2020 & 08.08.2020 |
காலிப்பணியிடங்கள்:
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டிரைவர் மற்றும் ஊழியர்கள் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு தஞ்சை, திருவாரூர், நாகையை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிரைவர் வயது வரம்பு & கல்வி தகுதி:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 24 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன டிரைவர் மற்றும் வாகன உரிமம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மருத்துவ உதவியாளர் வயது வரம்பு & கல்வி தகுதி:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 19 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் பி எஸ் சி நர்சிங் அல்லது டி ஜி என் எம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

0 Comments