
மருத்துவர் ஆய்வக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில் மருத்துவர், ஆய்வக நுட்புநர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது/
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர் அதிக அளவில் தேவைப்படுகினறனர். இதனால் விருப்பமுள்ளவர்கள் இந்த மருத்துவர், ஆய்வக நுட்புநர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட சுகாதார துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒப்பந்த ஊதியம் அடிப்படையிலேயே பணி வழங்கப்படும் என்றும், முப்படைகளில் மருத்துவ குழுவில் பணியாரிவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அன்றுக்குள் வேலூர் மாவட்ட சுகாதார துறை அலுவலகத்தில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

0 Comments