
தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Software Programmer மற்றும் IT Analyst பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28.07.2020 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பணியிடங்கள்:
தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் Software Programmer மற்றும் IT Analyst பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech/ M.Sc/ MCA/ Diploma தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 28.07.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

0 Comments